இலங்கையர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்று நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் வைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தமானது 10 வருடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இந்த காலப்பகுதியில் அதிகமான இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கமைய, தாதியர், கட்டடங்களை பராமரித்தல், இயந்திர தொழிற்றுறை, இலத்திரணியல் துறை, தொடர்பாடல் துறை, கட்டுமாணம், போக்குவரத்து மற்றும் பராமரிப்பு, மின்னணுத்துறை, கப்பற்றுறை, விமானத்துறை, விவசாயம், மீன்பிடித்துறை, உணவுப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலே இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

9 நாடுகளுக்கு ஜப்பான் இந்த தொழில்வாய்ப்பை வழங்கவுள்ளதுடன் இதில் 7ஆம் இடத்தில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நாள்களில் ஜப்பானின் தொழிற்றுறை நிபுணர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து, ​தேவையான தொழிநுட்ப அறிவுகள், பயிற்சிகளை இலங்கையர்களுக்கு வழங்கவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleகோட்டாபயவின் ரீட் மனு தள்ளுபடி
Next article50 ரூபா இன்னும் வழங்கப்பட வில்லை-வடிவேல் சுரேஷ்