வடக்கு கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த தொண்டர் ஆசிரியர் பிரச்சினைக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தீர்வு பெற்றுக் கொடுத்தார்.

தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாமல் இருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இந்த மாதம்  29 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்தெரிவித்தார்

கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற போரின் தாக்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியராக பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் கிடைக்காத பிரச்சனை நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு கல்வி ராஜாங்க அமைச்சராக பதவியேற்ற விஜயகலா மகேஸ்வரன்  எடுத்த முயற்சியின் பயனாக கடந்த மாதம் ஆயிரத்து 302 தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றிருந்தது, இத் தேர்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆயிரத்து 302 பேருக்கு பேர் இந்த நேர்முகத்தேர்வில் பங்குபற்றினர், அதில் ஆயிரத்து 130 பேர் தகுதிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேற்படி நியமனங்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில்  வழங்கி வைக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

Previous articleகண்டி வைத்தியசாலையிலிருந்து அத்துரலிய ரத்தின தேரர் வெளியேறினார்.
Next articleஇந்தியாவின் மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!