2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 11வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் வழங்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணை மற்றும் 150,000 ரூபா ரொக்கப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






