ஹொங்கொங் பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஹொங்கொங்கில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர்.

இதனால் அந்த சட்டமூலம் அரசாங்கத்தினால் பிற்போடப்பட்டது.
தற்போது அந்த சட்டமூலத்தை முற்றாக ரத்து செய்யுமாறு கோரி, பொலிஸ் தலைமையத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு பொலிஸாரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், தொடர்ந்தும் மக்கள் குவிந்து போராட்டத்தை நடத்துகின்றனர்.(சே)

Previous articleநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்!
Next articleகண்காணிப்பு எம்பியாக வேலுகுமார் நியமனம்