தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபொதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் பிரதிவாதிகள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த வழக்கு ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிராக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சே)






