நுவரெலியா மாவட்டம் நாவலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில், நாவலபிட்டி கினிகத்தேனைக்கிடையில் பலந்தோட்டை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவலபிட்டி பகுதியிலிருந்து பலந்தோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டர் சைக்கிள்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நி)

Previous articleஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை தடைப்பட்டது.
Next articleசாந்தி சிறிஸ்கந்தராஜாவுடன் தொண்டர் ஆசிரியர்கள் சந்திப்பு!