தேசிய மலையக ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஹட்டனில் மகளிர் மாநாடு ஒன்று நேற்று இடம்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு அதிதிகளாக சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரமேதாச மற்றும் தேசிய மலையக ஒன்றியத்தின் தலைவர் சமிர பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு, சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரமேதாசவிற்கு பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.
குறித்த மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. மாநாட்டில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர். (நி)








