ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு மரியாதை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி இரவிந்திர அம்பேபிட்டியவால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இடம்பெறும் அணிவகுப்பு மரியாதை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இந்த அணிவகுப்பு மரியாதை ஹட்டன் பொலீpஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் நிலைய பொறுப்பதிகாரியுமான ஏ.எம்.ஜெமில் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஹட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முதல் ஏனய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனைந்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து பொலிஸ் அத்தியட்சகர் இரவிந்திர அம்பேபிட்டியவால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களுடைய சீருடைகள் பரிசிலிக்கப்பட்டது.

அதனை அடுத்து ஹட்டன் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதேவேளை இந்த அணிவகுப்பு மரியாதையில் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வுட், நோட்டன்பிரீஜ், வட்டவலை, கினிகத்தேன, நல்லதன்னி ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர். (நி)

Previous articleகம்பஹாவில் முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை!
Next articleஉலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி