அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி மகோற்சவ பெருவிழாவின் பாற்குடபவனியும் சங்காபிசேகமும் இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

வராலாற்றுச் சிறப்பு மிக்க அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆனிப்பௌர்ணமி மகோற்சவ பெருவிழாவானது கடந்த 07 ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.

13ஆம் திகதி மாம்பழத்திருவிழாவும், 14ஆம் திகதி திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜையும், 15ஆம் திகதி வேட்டை திருவிழாவும் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று பாற்குடபவனியும், சத 108 சங்காபிசேகமும் மாலை முத்துசப்பர திருவிழாவும், நாளைய தினம் சமுத்திர தீர்த்தோற்சவம் மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.


18ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனத் திருவிழாவுடனும் 19 ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடனும் திருவிழா நிறைவுபெறவுள்ளது.

இன்று காலை கோளாவில் ஸ்ரீ விக்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழுங்க ஆரம்பமான பாற்குட பவனியில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலயத்தை சென்றடைந்த பாற்குடபவனியின் பின்னர் வம்மிடியப்பிள்ளையாருக்கான பாலாபிசேகம் இடம்பெற்றது.
பின்னர் பிரதான கும்பம் உள்வீதி உலாவும் நடைபெற்றது.

தொடர்ந்து சங்காபிகேம் நடைபெற்றடதுடன் பிரதான கும்பமும் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மூலமூர்த்தவர் மீது சொரியப்பட்டது.

இறுதியாக தீபாராதனைகள் நடைபெற்றதுடன் அடியவர்களுக்கு திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆலய பரிபாலன சபைத்தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் பாற்குடபவனி நடைபெற்றது.

சங்காபிசேக கிரியைகளை அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் மற்றும் ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். (நி)

Previous articleஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு (படங்கள் இணைப்பு)
Next articleபேராறில் சட்டவிரோத மணல் அகழ்வு! (படங்கள் இணைப்பு)