யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நீதிப் பேராணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த, 34 வதுடைய செல்லப்பர் பத்மநாதன் என்பவர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில், சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும், மாநகர முதல்வர் இரண்டாவது மனுதாரராகவும், மாநகர ஆணையாளர் மூன்றாவது மனுதாரராகவும், எடெற்கோ சேவிஸ் லங்கா நிறுவனம் நான்காவது மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். (சி)