அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்தை காப்பாற்ற எவ்வித தேவையுமில்லை என்றும் தமது கட்சி எப்போதுமே மிகவும் சிந்தனையுடன் குழுவாகவே தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார்.
அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தமக்கு தேவையில்லை என்றும் மக்களுக்கு சிறந்ததை செய்யும் செயற்பாடுகளுக்கு எவ்வித எதிர்ப்பையும் தமது கட்சி தெரிவிக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார்.(சே)