வடக்கு மாகாணத்தின் வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக வைத்திய கலாநிதி கோபி சங்கர்,வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், நேற்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயங்கள் மற்றும் சொத்திழப்புக்களுக்கும் முகங்கொடுத்துவரும் நிலையில், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் வீதி பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)