குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சி.ஐ.டி.யினர் இன்று நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே சி.ஐ.டி.யினர் இந்த தகவலை இன்றைய தினம் குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.(சே)

Previous articleபரிஸ் தேவாலய தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது
Next articleதிருகோணமலை மறை மாவட்ட ஆயர் – கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு