வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (11) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதற்காக சற்றுமுன்னர் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்றை விசாரணையின் போது தாய்மார்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (சே)