நீதிக்கு புறம்பாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சேகு சியாப்தீன் மொகமட் சாபிக் வைத்தியருக்கு எதிராக நாளுக்கு நாள் முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குருநாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் இதுவரையில் 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் மேலும் பலர் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்க்காக வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இன்று நண்பகல்வரையில் குருநாகல் வைத்தியசாலையில் 629 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன். தம்புள்ள வைத்தியாலையில் 108 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.(மு)