இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இதனைத் தெரிவித்துள்ளார்.
பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமானத்தைப் பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளான இலங்கைப் பெண்ணின் உறவினர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான பரிசோதனை அறிக்கை எதிர்வரும் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றும் மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.

Previous articleதடுப்பூசிகள் இரண்டையும் பெறாவிடின் சட்ட நடவடிக்கை!
Next articleதரமற்ற சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here