வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த நபரொருவர், திஸ்ஸமஹாரம-ரண்மினிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டுத்தொட்டத்தில், 620 கஞ்சா செடிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
60 வயதுடைய நபரொருவரையே,நேற்று (25), பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரை இன்று (26), நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.