இலங்கை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

இலங்கை புகையிரத சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இயந்திர சாரதிகள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், வீதி பரிசோதகர்கள் போன்றவர்கள் மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு வௌ்ளிக்கிழமை (28) காலை 09 மணிக்கு நாரஹேன்பிட்ட சாலிகா அரங்கில் இடம்பெறவுள்ளது.(சே)

 

 

Previous article19ஆல் நாட்டில் இரண்டு தலைவர்கள்!
Next article19ஆவது திருத்தத்தால் பாதிப்பு!