துவிச்சக்கர வண்டி விபத்துக்களை தடுப்பதற்கான இலவச  டைனமோ பொருத்தும்  நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன   .

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பயணிக்கின்ற துவிச்சக்கர வண்டி பயணிகள் மற்றும் மாணவர்களின்  பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை  மட்டக்களப்பு சமூக பொலிஸ் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கமைய மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  இரவு நேரங்களில் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டிகளுக்கு இலவச டைனமோ   பொருத்தும் நடவடிக்கைகள் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டன

மட்டக்களப்பு  சமூக பொலிஸ் குழுவின் தலைவரும் ,மாநகர சபை உறுப்பினருமான  இஸ்டீபன் ராஜன் ஏற்பாட்டில்  நடைபெற்ற நிகழ்வில்   மட்டக்களப்பு சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் Batticaloa,bkcke

 

Previous articleபுலமைப்பரிசில் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை!
Next articleஅம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு!