அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் கோளாவில் பிரதேசத்தில் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கைகள் மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டன.
பல வருடங்களாக குறித்த வீதியின் உட்புறமாக நடப்பட்டிருந்த மின்சாரத்தூண்களே ,வ்வாறு அகற்றப்பட்டன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதியின் ,ரண்டு கிலோமீற்றர் வரையான பகுதிகள் காபட் ,டப்பட்டு செப்பனிடப்பட்டது.
,ருப்பினும் ,வ்வீதியின் எல்லைகளுக்குள் ,ருந்த மின்சார தூண்களை அகற்றாமல் நடைபெற்ற ,ப்பணியால் அதிகமான விபத்துக்கள் ,டம்பெறுவதாக மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
விபத்துக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறித்த மின்சாரத்தூண்கள் அகற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த காலத்தில் அதிகமான விபத்துக்கள் ,டம்பெற்றுள்ள ,ப்பிரதேசத்தில் மேலும் விபத்துக்கள் அதிகரிக்காமல் மக்களை பாதுகாக்குமாறும் சம்மந்தப்பட்டவர்களிடம் வினயமுடன் வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டிய நிலையில் கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் உரிய அதிகாரிகளிடம் வினவினார். ,தன் போது அக்கம்பங்களை அகற்றுவதற்கு நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உடன் ,வ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அக்கரைப்பற்று ,லங்கை மின்சார சபை மின் அத்தியட்சகர் எஸ்.சுலக்ஷன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.