மட்டக்களப்பு -கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் நோற்று இரவு இடம்பெற்ற விபத்தில் செங்கலடியை சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
இவர்கள் கித்துள் கிராமத்தில் உள்ள வயலொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென வீதியின் குறுக்கே சென்ற சருகுபுலி மீது இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின்கம் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளனர்.
செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய கௌரீஸ்வரன் கௌவிதுசன் மற்றும் 19 வயதுடைய பேரின்பராசா பேருஜன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
ஒருவரது சடலம் செங்கலடி வைத்தியசாலையிலும் மற்றவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.