இலங்கை ஒரு ஜனநாயக நாடு இந் நாட்டில் வாக்குரிமை என்பது ஆயுதபலத்தை விட மிகவும் பெறுமதிவாய்ந்ததாகும்.
தற்போது வாக்களர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் அனைவரும் தவறாது தங்களது பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் க.சிவலிங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் வாக்காளர் பதிவேட்டில் தங்களது பெயர்களைப் பதிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத நிலையில் இருந்து வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டாதுள்ளனர். இது தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் செயற்திட்டத்தினை அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் க. சிவலிங்கம் முன்னெடுத்து வருகின்றார்.
இது தொடர்பில் எமது டான் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய செவ்வியில்.. எமது வாக்குரிமையை சரியாகப்பயன்படுத்தினால் தான் தமிழ் மக்கள் சார்ந்த கூடுதலான பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ளமுடியும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் வீதமும் குறைவடைந்திருந்தன. வாக்காளர்களாக பதிவதில் அசமந்தமாக இருந்து விடாது தங்களது பிரிவு கிராம சேவகரை அணுகி வாக்காளர் பதிவேட்டில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.(ம)