வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
26 ஆம் திகதி ஆரம்பமாகும் திருவிழா, எதிர்வரும் 4 ஆம் திகதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறுவதுடன், நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 4 ஆம் திகதி, மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், காலை 7.30 மணிக்கு திருவிழாத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், திருவிழாவிற்கு தென்னிலங்கையில் இருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால், பக்தர்களுக்காக சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன் அறிவித்துள்ளார்.






