வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிவடைந்துள்ளது.
தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத சமயம் பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
எனினும் தீ விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளன.
தீ விபத்தை அடுத்து குறித்த குடும்பத்தினர் வசிப்பதற்கும் இடமின்றி நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (நி)







