விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான, வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், இன்றுபிற்பகல் 2.30 மணியளவில், பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும், விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும் வயல் நிலங்களில், திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, வயல் நிலங்கள் தீக்கிரையானது.
தீப்பரவலினால் ஏற்பட்ட புகையின் காரணமாக, ஏ9 வீதியில் சிறிது நேரம் பயணத்தடை ஏற்பட்டது.சிறுபோக அறுவடையின் பின்னரான காலப்பகுதியில் விபத்து ஏற்பட்டதனால், பாரிய அழிவுகள் தவிர்க்கபபட்டுள்ளது.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தீ அணைப்பு பிரிவினர், ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். (சி)







