வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராசா வித்தியாலயத்தில், இன்று பிற்பகல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் நிறைவு பெற்று, மாணவர்கள் வெளியே சென்ற போது குளவி தாக்கியதில், 9 மாணவர்கள் மற்றும் காவலாளி உட்பட 10 பேர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிற்பகல் 1.30 மணியளவில், பாடசாலையில் இருந்து 300 மீற்றர் தொலைவிலுள்ள தனியார் காணியில் இருந்த வேம்பு மரத்தில் இருந்து கலைந்த தேன் குளவிக்கூட்டிலிருந்த குளவிகள், 7 மாணவிகளையும், 2 மாணவர்களையும், இச்சம்பவத்தை பார்வையிடச் சென்ற பதுகாப்பு காவலாளி உட்பட 10 பேரையும் தாக்கியுள்ளது.

இந்த நிலையில், தாக்குதலுக்குள்ளானவர்கள் சிதம்பரபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், கல்வி வலயப் பணிப்பாளருக்கு தகவல் வழங்கியதாகவும், அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், வித்தியாலய அதிபர் இ.தமிழகன் குறிப்பிட்டார். (சி)

Previous articleஇரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் முறைப்பாடு
Next articleமுல்லைத்தீவு ஒதியமலை கிணற்றில் விழுந்த யானை மீட்பு