வவுனியா குட்செட்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து குட்செட்வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் குட்செட்வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் அருகே மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதுடைய கேதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை!
Next articleநாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here