வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி 4 மாணவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியில் இருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றியவாறு கோவில்குளம் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், சிதம்பரபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தும் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு மாணவர்களும், 44 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நி)

Previous articleவைத்தியர் சாபி தொடர்பில் 758 பேரிடம் வாக்குமூலம்
Next articleதியாகிகள் தினம் யாழில் அனுஸ்டிப்பு