வவுனியா புளியங்குளம் புகையிரதக் கடவையில், இன்று பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி, இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம், புதூர் ஆலயத்தில் இருந்து பிரதான வீதிக்குச் மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட இளைஞன் மீது மோதியுள்ளது.
இதனால், புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இலகநாதன் நர்மதன் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதூர் பகுதியில் கடந்த வருடமும் இடம்பெற்ற புகையிரத விபத்தில், இரு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleசவூதி அரேபிய பல்கலைக்கழகம், உலகத்திற்கே ஆபத்தானது : அத்துரலியே தேரர்
Next articleநன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு