வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் அவரை கண்டு பிடிக்காமையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleசெல்வசந்நிதி புனித திருத்தல யாத்திரை  மட்டக்களப்பை வந்தடைந்தது
Next articleவெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கதிரொளி BLUE SHARK