வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.


இலங்கை தேசிய சமாதான பேரவையினால், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று, இன்று வவுனியா பௌத்த வணக்கஸ்தலத்தில் இடம்பெற்றது.

நல்லிணக்கம் தொடர்பான பிரதேச சர்வ மதக்குழு, சிவில் பாதுகாப்புக்குழு, மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூகப்பிரதிநிதிகள், மத குருமார்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடல் பிற்பகல்வரை நடைபெற்றது.

மக்களுக்கிடையே இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.(சி)

Previous articleகிளிநொச்சியில் பொலிஸார் கௌரவிப்பு
Next articleஅம்பாறையில், விளையாட்டு கலாசார நிகழ்வு