வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன், அதன் சாரதி அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
குறித்தசம்பவம் இன்று காலை 10 மணியளவில் வவுனியா-தாண்டிக்குளம் தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரதக் கடவையால் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று, தண்டவாளப் பகுதியில் சென்றபோது இயந்திரக்கோளாற்றினால் நின்றுள்ளது.
இதன்போது கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வந்த புகையிரதம் குறித்த முச்சக்கரவண்டியினை மோதித்தள்ளியது.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி விரைந்து செயற்ப்பட்டு கீழே பாய்ந்தமையால் அதிஸ்டவசமாக உயிர்பிழைத்தார்.
முச்சக்கரவண்டியை மோதிய தொடரூந்து அதனை சிறிது தூரத்திற்கு இழுத்துசென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநீரேந்தும் பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்!
Next articleமன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here