வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் மாட்டுக் கொட்டகையில் தீ பரவியதை கண்ட அயலவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவ் வட்டாரத்தைச் சேர்ந்த நகரசபை உறுப்பினர் லரீப், உபதவிசாளர் க.குமாரசாமி மற்றும் நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீ தொடர்ந்தும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

எனினும் மாட்டு கொட்டகை முற்றாக எரிந்து நாசமாகியது.

இதில் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் சில மாடுகள் காயமடைந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நி)

Previous articleதொழில்நுட்பகூடம் திறந்து வைப்பு!
Next articleஅமெரிக்காவில் நிலநடுக்கம்!