தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும், இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பல்வேறு தேவைகளின் பொருட்டு, தபால் நிலையத்திற்கு சென்ற பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். (சி)








