கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்றவர்கள் பயணித்த பேருந்து, வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து, கல்குனா மடுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகியதாக ஈரப்பெரியகுள பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)