அண்மையில் நியமனம் பெற்ற, பாடசாலைகளுக்கான விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி, வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில், இன்று நடைபெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையிலும், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதகுமாரின் ஒழுங்கமைப்பிலும், கடந்த 9 நாட்களாக, தொடர்;ச்சியாக இப்பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

இப்பயிற்சி வகுப்பில், வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த 42 பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்று, பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சிக்கான வளவாளர்களாக, வவுனியா மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். (சி)

Previous articleஅமைச்சு பதவி திருத்தம்
Next articleவவுனியாவில், காணிப் பிணக்குகள் தொடர்பில் செயலமர்வு