யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் வீடொன்றில் இருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில், 55வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினடிப்படையிலேய குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)