காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீரப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சண்முகம்பிள்ளை சறோஜினி தலைiமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வடக்கு, கிழக்கில் படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்து கடந்த பத்து வருடங்களாக தங்களுக்கு எதுவிதமான பதிலும் கிடைக்காமையினால் தங்கள் பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக போராட்டக்களத்தில் இருந்த உறவுகள் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே எமக்கு நீதி விசாரணை வேண்டும், ஏமாற்றாதே, ஏமாற்றாதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றாதே, எங்களால் நிராகரிக்கப்பட்ட ஓ.எம்.பியை எங்கள் மீது திணிக்காதே, கையிலே ஒப்படைத்தவர்களை திருப்பி கொடு போன்ற வாசகங்களையும் தாங்கியிருந்ததோடு, கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை, தமது உறவுகளை மீட்கும் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Next articleவாக்குமூலம் பெறாமல் ரிஷாத் விடுதலை-முஸம்மில்