வவுனியாவில், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக, சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று மதியம் 12.00 மணியளவில், வவுனியா கந்தசாமி கோவிலில், தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், க கந்தசாமி கோவில் வீதி வழியாக, மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து கண்டி வீதி வழியாக, தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்து, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, தொடர் போராட்டம் இன்றுடன் 900 ஆவது நாளை எட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)