வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.

இதேவேளை, 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ள சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதில் பாடசாலைக்கான நாளாக சனிக்கிழமை ஒன்றைத் தீர்மானித்து நடாத்துவதற்கு லிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. (நி)

Previous articleஇலங்கையர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் : ஐ.நா அறிக்கையாளர்
Next article‘கஜாபாஹு’ கப்பலை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்