மலையகத்தில் தொடரும் வரட்சி காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்த நிலையில், நீர்த்தேக்கங்களில் நீரினால் மூடப்பட்டிருந்த கோயில்கள் தோற்றமளிக்கின்றன.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, நூற்றுக்கு 26.5 வீத உயரமும், மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நூற்றுக்கு 26.07 வீதம் உயரமாக காணப்படுவதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றமையினால், நீரில் மூழ்கியிருந்த கோயில்கள், பௌத்த சிலைகள் என்பன வெளியே தெரிகின்றன.
இதனால், அப்பகுதி மக்கள், கோயில்கள் மற்றும் பௌத்த சிலைகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மௌசாக்கலை நீர்த்தேக்கத்தில், நீர் வற்றிய பகுதியில் பூக்கள் மலர்ந்திருப்பதையும், அதிகவளான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டு செல்வதுடன், நீர் வற்றிய நிலையில் வெளியே காட்சிகயளிக்கின்ற ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தையும் வழிபட்டுச் செல்கின்றனர்.












