ஏப்பரல் மாதம் ஜ.எஸ் தீவிரவாத தாக்குதல் நாட்டில் இடம்பெற்ற பின்னர், ஹெட்டிப்பொல பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது, தாக்குதலுக்குள்ளாகிய பள்ளிவாசல்களுக்கு சி.சி.டி.வி கமராக்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கமராக்கள் நேற்று, கொட்டாம்பிட்டிய பள்ளிவாசலில் வைத்து, ஆறு ஜூம்ஆ பள்ளிவாசல்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது பள்ளிவாசல்களின் மௌலவிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)