வடக்கு, கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு, வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றது.

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தது.

இதுவரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது குறித்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தின் மத்திய இடமான வவுனியாவில் நடைபெற்று வருவதுடன், தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மா)

Previous articleமக்களைக் கொன்று என்னாலும் ஜனாதிபதியாக முடியும்-மஹிந்த
Next articleவட மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்