வடக்கு மாகாணத்தில், காணி பிரச்சினைகள் தொடர்பாக, மாகாண காணி உதவி ஆணையாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், யாழ். மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க இணைப்பாளர் இன்பநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாதன், வட மாகாண உதவி காணி ஆணையாளர் ம.மகேஸ்வரன், தெல்லிப்பளை குடியேற்ற உத்தியோகத்தர் தர்சிகா, முசலி பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் எஸ்.நிலாந்த், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர் எஸ்.கருணாகரன், வேலணை பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் இளமுருகன், கரைதுறை பற்று குடியேற்ற உத்தியோகத்தர் சரவணன், மன்னார் பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் வி.சோதி, இளம்கட்டு பூனகரி பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் ம.குகநேசன் மற்றும் வட மாகாணத்திற்கு உட்பட்ட கேப்பாப்புலவு காணி விடுவிப்பு போராட்ட குழு, வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில், காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்ட பல அமைப்புக்களின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க மகா சபை தலைவர் இ.முரளிதரன் உட்பட சுமார் நூறு பேர் வரை கலந்துகொண்டனர்.
இதில், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. (சி)







