வடக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள விடுதி ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவரினால் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் நான்குபேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தினை நேரில் கண்டவர் கூறுகையில், திடீரென விடுதியில் உள்நுழைந்த நபர் அறைகளுக்குள் சென்று துப்பாக்கிச்சூட்டினை நிகழ்த்தினார் என தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கோட் மோரிசன் தெரிவிக்கையில் இந்த சம்பவம் தீவிரவாத அமைப்புக்களுடன் சேர்ந்தது இல்லை என தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் டார்வின் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.