நுவரெலியா சாமிமலை, மானளி தோட்டப் பகுதியில், பாராஊர்தி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மானளி தோட்டத்தில் இருந்து லிந்துலை நோக்கிப் பயணித்த பாரா ஊர்த்தி, சாமிமலை ஹட்டன் பிரதான வீதிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த 14 வயதுடைய சிறுவன், உடனடியாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் பாரஊர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பாரஊர்த்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. (நி)









