லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளனிற்கு யாழ் மாநகர சபையினால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் உறுப்பினரும், முன்னாள் முதல்வருமாகிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் தயாளனிற்கு,
யாழ் மாநகர சபையில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

தொடர்ந்து, கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளனுக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாண மாநகரத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், லண்டன் கிங்ஸ்ட்ன் முதல்வராக பதவி வகித்தபோது தான் எதிர்கொண்ட அனுபவங்களை தயாளன் பகிர்ந்து கொண்டார்.

கலந்துரையாடலின் நிறைவில், யாழ் மாநகர சபையின் சார்பில், மாநகர முதல்வரால், கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு அவுஸ்ரேலியாவில் தடை!
Next articleமாவட்ட, பிரதேச நிர்வாகங்கள் பலப்படுத்தப்படுகின்றன!