முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக்கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையில் இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரானமுத்தையா சகாதேவன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் கொழும்பு தேசியவைத்தியசாலையில் உயிரிழந்தார்.
குறித்த மரணத்துக்கு பின்னர் கதிர்காமர் கொலை வழக்கை நடத்துவதில்லை என மேல் நீதிமன்றம்அறிவித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(சி)






