தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்னாண்டோவை ஜீலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொள்ளைச்சம்பவம் ஒன்று தொடர்பாக நேற்று நீர்கொழும்பு நகரத்தில் வைத்து கட்டான பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஐக்கியதேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்புமாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ரொய்ஸ் பெர்னாண்டோ இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரான ரொய்ஸ் விஜித பெர்னாண்டோவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு மேலதிக நீதவான் ரி.என்.எல். மாவத்த உத்தரவிட்டுள்ளார்.(சி)

Previous articleதமிழ் மொழி தினப்போட்டியில் மட்டு. புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முன்னிலை
Next article5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்க ஆளுநர் தடை!