முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான முறைப்பாடுகளை மீளப் பெறவுள்ளதாக, மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அறக்கட்டளையின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ரிஷாத் இன்றோ அல்லது நாளையோ அமைச்சராக பதவியேற்பார், அபோது எங்களை பழிவாங்கும் படலம் ஆரம்பமாகும், நாங்கள் தாக்கப்படுவோம் அதனால் நாங்கள் பதிவு செய்த முறைப்பாடுகளை வாபஸ் பெறுவேன், அவருடைய காலில் விழுந்து மன்னிபப்பு கேட்பேன், இல்லாவிட்டால் எங்கள் மீது வீணாக தண்டப்பணம் அறவிடுவார்கள்.
காலாவதியான உணவுகளை சதோசையின் ஊடாக மக்களுக்கு வழங்கினார் என்றுதான் ரிஷாத் மீது முதல் முறைப்பாடை நான் பதிவு செய்தேன், என்னிடம் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்ற பின்னர்தான் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது, அனால் இன்றுவரை எதையும் செய்யவில்லை.
இப்போது ரணில் விக்ரமசிங்க அவருக்கு தேவையான வாக்குகளை ரிஷாத்தை வைத்து சேர்த்துக்கொண்டார்;. அதனால் பதிவு செய்த முறைப்பாடுகளின் மீதிக்கு விசாரணை நடத்த மாட்டார்கள்.
பவ்சர் என்பவர் செய்த ஊழல்கள் தொடர்பாக விசாரிக்கவில்லை. தேயிலைக்கு பயன்படுத்தப்படும் வர்ண கலவைகளை கொண்டுவந்தார்கள் ஆனால் அதனயும் யாரும் விசாரிக்கவில்லை.
சிங்கள வியாபாரிகளிடம் 8 கோடிகள் தண்டப்பணம் அறவிடப்பட்டது ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதனால் ரிஷாத் மீது முறைப்பாடு பதிவு செய்தவர்கள் அனைவரையும் நான் அழைக்கின்றேன் வாருங்கள் என்னுடன் சென்று முறைப்பாடுகளை வாபஸ் பெறுவோம் என தெரிவித்தார். (சி)









